×

கரூர் மனோகரா கார்னர் அருகே ஆரோக்கிய பாரத பயண நடைபயிற்சி

கரூர், நவ. 2: கரூர் மனோகரா கார்னர் அருகே ஆரோக்கிய பாரத பயண நடைபயிற்சி நடைபெற்றது, ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று கரூர் மனோகரா கார்னர் அருகே கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆரோக்கிய பாரத பயணம் நடைபயிற்சி நடைபெற்றது. உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட எஸ்பி ராஜசேகரன் துவக்கி வைத்தார். இந்த நடைபயிற்சி கரூர் மனோகரா கார்னர் முதல் கரூர் வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி  வரை நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளின் என்எஸ்எஸ், என்சிசி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Bharat Bharat Travel ,Karur Manohara Garner ,
× RELATED செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்